இடுகைகள்

ஜூன், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் கிராமத்தில் குளம் இருந்தது..!

படம்
வழி தவறிய இரண்டு மீன்கள் சந்தித்துக் கொண்டன மணல்வெளியில். இரண்டிடமும் கடல் பற்றிய கதைகள் இருந்தன கடல் இல்லை -இலக்குவண் ‘கிராமங்களின் இயல்பு தொலைந்துவிட்டது’ என்பது எல்லோரும் பேசி சலித்த வாக்கியமாகிவிட்டது. ஆனாலும் அவற்றை பேசுவதற்கான தேவைகளும், காரணங்களும் மேலும், மேலும் பெருகியபடியே இருக்கின்றன. உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்களில் ஏற்பட்டிருக்கும் நுண்ணிய மாற்றங்கள் பற்றிய மாற்றுப்பார்வைகள் அவசியமானவை. எங்கள் ஊரிலும், தஞ்சாவூரைச் சுற்றிய ஏனைய கிராமங்களிலும் ஆற்றுப்பாசனம்தான் பிரதானம் என்றாலும் குளங்களும் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களும் அன்றாட வாழ்க்கையில் குளத்தை மையப்படுத்திய கலாச்சாரமும் மக்களிடம் இருந்தது. செங்கூரணி குளக்கரையின் மேற்கே ஆண்கள் படித்துறை, கிழக்கே பெண்கள் படித்துறை. அந்த இடத்தில் மட்டும் குளத்து நீர், ஒரு தெரு போல உள்நோக்கி நீண்டு செல்லும். துணி துவைப்பதற்காக போடப்பட்டிருக்கும் சொறி மண்டிய கல்லின் இடுக்குகளில் எப்போதும் சவுக்காரக் கட்டியின் மிச்சங்கள் ஒட்டியிருக்கும். சோப்பு டப்பா பவுசு அறியாதவர்கள் சோப்பின் மேலே ஒரு பூவரசு இலை... கீ

கங்காணி..!

படம்
அவனுக்கு சுப்பிரமணின்னு பேரு. ஆனா ஊருமுழுக்க ‘செவத்தான்’னுதான் கூப்பிடுறது. அப்படி ஒண்ணும் அந்தப்பய வெள்ளைக்காரன் கலர் கிடையாது. தார் டின்னுக்கு கால் முளைச்ச மாதிரிதான் இருப்பான். எப்படியோ அப்படி ஒரு பேராகிப்போச்சு. இன்ன வேலைன்னு கிடையாது.. கல்யாண வீட்டுல பந்தல் போடுவான். தென்னமட்டைவொளை வாங்கியாந்து ஊறவச்சு, நறுவுசா கீத்து பின்னுவான். இங்கேருந்து கருக்காக்கோட்டை வரைக்கும் கூரை மேய போவான். மீன்வாங்கப்போனபய, குளத்துல இறங்கி வலை போட்டுகிட்டு நிப்பான். சித்தன்பாடு, சிவன்பாடுதான் அவம் பொழப்பு. ஆனா அவனுக்குன்னு ஒரு காலம் உண்டு. அந்த நேரத்துல அவன்தான் ராசா. ஆத்துல தண்ணி வந்துட்டா ஊருக்குள்ள பெரிய வாத்தியைவிடவும் அவனுக்குதான் மதிப்பு அதிகம். எந்த விவசாய வேலையா இருந்தாலும் கூலியாளுக்கு அவன்கிட்டதான் வந்தாகனும். சேறடிக்க, வரப்புவெட்ட, நாத்தறிக்க, ஏர் ஓட்ட, பரம்பு செட்டு வைக்க, நடவு நட, களைபறிக்க, அறுப்பு அறுக்கன்னு எல்லாத்துக்கும் அவன்தான் கங்கானி. இன்ன கிழமைக்கு இன்ன வேலைக்கு இத்தனை பேரு வேணும்னு ரெண்டு நாளைக்கு முந்தி சொல்லிட்டாப் போதும்... டான்னு ஆளோட வந்துடுவான். அதுக்கு முன்னாடி கூலியாளுக்க